தேசம் தேவனை அறியும்

1. தேசம் தேவனை அறியும்
திசையெங்கும் எதிரொலி கேட்கும்
திருச்சபையெங்கும் எழும்பும்
தேவனுக்கே என்றும் மகிமை
அல்லேலூயா – 7

2. களங்கமற்ற வாழ்வு
கசிந்திடாத நிறைவு
கலைந்திடாத கனவு
கடமையில் வெற்றியைக் காணும் – தேசம்

3. இடைவிடாது ஜெபித்தால்
இளைப்படையாது உழைத்தால்
போவதும் போகச் செய்வதுமே
மிக மிக எளிதேயாகும் – தேசம்

4. மாநிலங்கள் எல்லாம்
பல நூறு ஊழியர் பெற்று
பல்லாயிரம் திருச்சபையை
பலகோடி மக்களால் நிரப்பும் – தேசம்

5. அர்ப்பணம் செய்வோம் இன்று
நம் அத்தனையும் அவர்க்கென்று
அற்பமே ஆரம்பம் ஆனால்
யார் அசட்டை செய்திட முடியும்? – தேசம்



thesam thevanai ariyum

1. thesam thevanai ariyum
thisaiyengkum ethiroli kedkum
thirussabaiyengkum ezhumbum
thevanukke endrum makimai
alleluya – 7

2. kalangkamatrra vazhvu
kasinththidadha niraivu
kalainththidadha kanavu
kadamaiyil vetrriyaik kanum – thesam

3. idaividathu jebiththal
ilaibpadaiyathu uzhaiththal
povathum pokas seyvathume
mika mika elitheyakum – thesam

4. ma nilangkal ellam
pala nuru uuzhiyar petrru
pallayiram thirussabaiyai
palakodi makkalal nirabbum – thesam

5. arbpanam seyvom indru
nam athdhanaiyum avarkkenru
arpame aarampam aanal
yar asattai seythida mudiyum? – thesam